மின் கார்களைப் பகிரும் நிறு வனமான 'புளூஎஸ்ஜி', சிங்கப் பூரில் தனது 100 ஆவது மின் னூட்டு நிலையத்தை திறந்தது. இந்த நிலையம் கேண்டோன் மண்டட் ரோட்டி லுள்ள 'திபின்ன கல் எட் டக்ஸ்டன்' அமைந்து உள்ளது. 'புளூஎஸ்ஜி' யின் கீழ் உள்ள 230 கார்களும் இந்தச் சேவை யைப் பயன்படுத்தும் கிட்டத்தட்ட 17,000 உறுப்பினர் களுக்கும் புதிய நிலையத்தை உபயோகிக் கலாம். மின் கார்களை பகிரும் இந்தத் திட்டம் கடந்த டிசம்பர் தொடங்கப்பட்டது.
இந்நிறுவ னத்திற்கு அப்போது 80 வாக னங்களும் 32 மின்னூட்டு நிலையங்களும் இருந்தன. பிரான்சைச் சேர்ந்த 'பொல்லோர்' குழுமத்தில் 'புளூஎஸ்ஜி' அங்கம் வகிக்கிறது. இம்மாதம் 3ஆம் தேதிக்கும் 12ஆம் தேதிக்கும் இடையே 100 நிமிடங்களுக்கு அதிகமாக வாக னமோட்டும் தனது 'ப்ரீமியம்' நிலை உறுப்பினர்களுக்கு 'புளூ எஸ்ஜி' ஒரு மணி நேரத்திற்கு இலவச வாடகையை அளிக்கும் என்று இந்நிறுவனம் தெரி வித்தது.ஈ° புதிய நிலையங்களுக்கான வேண்டுகொள்களின் எண் ணிக்கை 6,000க்கும் அதிகமாக இருப்பதாக 'புளூஎஸ்ஜி' தெரி வித்தது. மக்கள் பலர் எளிதில் செல்வதற்கு வசதியாக உள்ள இடங்களில் புதிய நிலையங் களைத் திறக்கப் போவதாக நிறுவனம் கூறியது.

