சிங்கப்பூருக்கு வரும் வெளி நாட்டுப் பயணிகள் இனிமேல் வெள்ளை நிற வருகை அட்டை களை பூர்த்திசெய்ய தேவை யில்லை. முன்கூட்டியே இணையம் மூலமாக மின்னிலக்கப் பதிவு செய்துகொள்ளலாம். பயணி களுக்கு எளிதாகவும் விரைவாக செயல்படக்கூடிய தா கவும் இருக்கும் இந்த மின்னி லக்க வருகை பதிவு முறையை குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இன்று தொடங்கும் இந்த மின்னிலக்க பதிவுக்கான சோதனை மூன்று மாதங்களுக்கு நடைபெறுமென்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வான் நிலம், கடல் என அனைத்து வழிகளிலும் இடம் பெறும் வருகைகளுக்கும் இந்த மின்னிலக்க முறை செயல்படுத்தப் படவுள்ளது. பயண படகு களுக்கும் சொகுசு கப்பல்க ளுக்குமான முனை யங்களிலும் இந்த முறை சோதிக்கப்படும்.
மூன்று மாத காலகட்டத்தில், வருகையாளர் மின் பதிவு செய் யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி கள், நீண்ட கால அனுமதி அட்டையைக் கொண்டிருப் பவர்கள் ஆகியோரை இந்த மின்னிலக்கப் பதிவு பாதிக்காது. சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே தங்களது விவரங்களைப் பதிய வேண்டும். இதற்கான கைத் தொலைபேசி செயலியையும் ஆணையம் தயாரித்துள்ளது. முன்னர், வருகையாளர் அட் டை யில் நிரப்பும் விமானப் பயணம் குறித்த விவரங்கள், தங்கும் காலம், தங்குமிடம் போன்ற விவரங்களை இந்த மின்னிலக்கப் பதிவில் பதிய வேண்டும். சுற்றுப் பயணிகள் தங்களது விவரங் களை குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் இணையப் பக்கத்தின் வழி அல் லது கைத்தொலைபேசி வழி சிங்கப்பூ ருக்கு வருவதற்கு முன்னரே பதிந்துகொள்ளலாம். ST PHOTO: KUA CHEE SIONG

