அமைச்சர்: ஸ்கில்ஸ்ஃபியூச்சர் காரணமாக கல்வி பற்றிய மனப்போக்கில் மாற்றம்

அமைச்சர்: ஸ்கில்ஸ்ஃபியூச்சர் காரணமாக கல்வி பற்றிய மனப்போக்கில் மாற்றம்

1 mins read

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கம், கல்வி பற்றிய மனப்போக்கை மாற்றி வருவதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரர்கள் தொடர்ந்து செழித்திருக்க வேண்டுமானால் அவர்களுக்கு அறிவும் தேர்ச்சி களும் தேவை என்ற சிந்தனை, அண்மைய காலத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களுக்கு ஆதரவாக இருக் கிறது என்றார் அமைச்சர்.

இந்தப் புதிய இலக்கு, எதிர் காலத்தில் சிங்கப்பூரர்களுக்குப் பதிலாக கணினிகளும் மனித இயந்திரங்களும் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண் டது என்று திரு ஓங் குறிப்பிட்டார். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கம் 2015ல் தொடங்கப்பட்டது.

அந்த இயக்கம் பள்ளிக்கூடங்கள், உயர் கல்வி, ஊழியர்கள் மேலும் மேலும் கற்பது ஆகியவற்றை எல்லாம் உள்ளடக்கி எதிர்காலத்திற்கு எல்லாரும் ஆயத்தமாக தேவை யான உருமாற்றத்தை இடம்பெறச் செய்வதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். "ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கம் என்பது வாழ்க்கைத்தொழில் அல்லது தொழில்நுட்ப வேலையை மட்டும் மேம்படுத்துவது அல்ல. சிங்கப்பூரர்கள் தங்களுடைய ஏட்டுக் கல்விக்கு அப்பாலும் சென்று தேர்ச்சிகளைக் கற்றுக் கொண்டே வரவேண்டும் என்று வலியுறுத்துவதே அந்த இயக்கம்," என்று திரு ஓங் விவரித்தார்.