இணையத்தில் பணிப்பெண் பற்றி விளம்பரம்: நிறுவனம், ஊழியர் மீது 243 குற்றச்சாட்டுகள்

இணையத்தில் பணிப்பெண் பற்றி விளம்பரம்: நிறுவனம், ஊழியர் மீது 243 குற்றச்சாட்டுகள்

1 mins read

எஸ்ஆர்சி ரெக்ருட்மண்ட் என்ற நிறுவனத்தின் மீதும் அதனுடைய ஊழியர்களில் ஒருவர் மீதும் கேரொசெல் என்ற இணையச் சந்தை தளத்தில் வீட்டுவேலை பணிப்பெண்களை 'விற்பனை' செய்ததாகக் கூறும் 243 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தப் பணிப்பெண் 'விற்பனை' விளம்பரங்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடையில் இடம்பெற்றதாகவும் அவை காரணமாக பணிப்பெண் களுக்குக் கண்ணியக் குறைவு ஏற்பட்டதாகவும் மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரி வித்து உள்ளது.

அந்த நிறுவனத்தின் ஊழிய ரான எர்லினா முகம்மது அலி, 41, என்பவர் அந்த விளம்பரங்களை அந்தத் தளத்தில் பதிவேற்றி இருந்தார் என்றும் அறிக்கையில் குறிப் பிட்டு உள்ளது. எஸ்ஆர்சி ரெக்ருட்மண்ட் நிறுவனம், வேலைநியமன முக வர்கள் சட்டத்தின்கீழ் மொத்தம் 144 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்குகிறது. ஊழியரான எர்லினா, 99 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு கிறார். எஸ்ஆர்சி நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய் யப்பட்டுவிட்டது.

வேலைநியமன முகவையைச் சேர்ந்த ஊழியர் பதிவில் இருந்து எர்லினா நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த அமைச்சு செப்டம்பர் 14ஆம் தேதி அத்தகைய விளம் பரங்கள் தொடர்பில் ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது. அத்தகைய விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்று வேலைநியமன நிறுவனங்களை அமைச்சின் அந்த ஃபேஸ்புக் செய்தி எச்சரித்தது.