2018ல் வேலையிடங்களில் கீழே விழுந்து ஐவர் மரணம்

2018ல் வேலையிடங்களில் கீழே விழுந்து ஐவர் மரணம்

2 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூரில் 2018ல் வேலையிடங் களில் மேலிருந்து கீழே விழுந்து ஐந்து பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். உயரமான இடங்களில் அமைக் கப்பட்டிருந்த தளங்கள் உறுதி யாக இல்லாமல் இருந்ததும் பக்க அடைப்புகள் சரிவாக இருந்ததும் அவற்றில் நான்கு மரணங்களுக் குக் காரணம் என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம் மது தெரிவித்து இருக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை வேலையிடங்களில் கீழே விழுந்து காயம் அடைந்த வர்களின் எண்ணிக்கை 358 ஆகக் குறைந்து இருக்கிறது.

இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 388 ஆக இருந்தது. அமைச்சர், நேற்று மரினா பே சேண்ட்சில் நடந்த உயரமான இடங்களில் வேலை பற்றிய கருத் தரங்கில் உரையாற்றினார். அப் போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். சிங்கப்பூரில் 2009ல் வேலை இடத்திலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தவர் களின் எண்ணிக்கை 24 பேராக இருந்தது. அது 2017ல் எட்டு பேராகக் குறைந்தது.

இத்தகைய மரணங்கள் வேக மாகக் குறைந்து வருவது ஊக்க மளிக்கிறது என்றாலும் இவற்றைத் தவிர்க்க இன்னும் ஏராளமான வற்றைச் செய்யவேண்டி இருக் கிறது என்று அவர் குறிப்பிட்டார். கூரை வேலைகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய தரை பகுதி யில் வேலைகள், திறந்த இடத்தில் வேலைகள் ஆகியவை உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள சூழ்நிலை களைத் தவிர்க்க உதவும் பாது காப்பு கட்டுப்பாட்டு அம்சங் களைக் கொண்டிருப்பதில் இந்த ஆண்டில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். நிறுவனங்கள், தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி விபத்தில்லா சாதனையை நிகழ்த்துவது குறித்து பரி சீலிக்கலாம். அல்லது வேலையிட பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் சேவைகளை நாடலாம் என்று திரு ஸாக்கி கூறினார்.