உள்நாட்டு பாதுகாப்பு துறைக்குப் பிரதமர் புகழாரம்

உள்நாட்டு பாதுகாப்பு துறைக்குப் பிரதமர் புகழாரம்

1 mins read

சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் விழிப்பு நிலையும் உறுதியான முயற்சிகளும் சிங்கப்பூரை பாதுகாப்பான நாடாக வைத்திருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். அந்தத் துறையின் 70வது ஆண்டுவிழா விருந்து நிகழ்ச்சி யில் எடுக்கப்பட்ட புகைப்படங் களைப் பிரதமர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பகிர்ந்துகொண்டார். தன்னலம் பாராத அர்ப்பணிப்பு உணர்வுடன் தொண்டாற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுக் குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். "சிங்கப்பூருக்கு வயது 53 தான். ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் வரலாறு அதைவிட பழமையானது. கடந்த 1960கள் வரையில் இந்தத் துறை கம்யூனிஸ்ட் மிரட்டலைச் சமாளிப்பதில் முக்கியமான பணியாற்றியது.

"இப்போது சிங்கப்பூர் புதிய, ஆபத்தான மிரட்டல்களை எதிர்நோக்குகிறது. குறிப்பாக பயங்கரவாதம், இணையப் போர்க்களம் ஆகிய மிரட்டல்களை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது," என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விழிப்புநிலையும் உறுதியான முயற்சிகளும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன என்று குறிப்பிட்ட திரு லீ, ஆற்றல், நம்பகத்தன்மை ஆகிய வற்றைப் பொறுத்தவரையில் அந்தத் துறை உறுதியான நற் பெயரைப் பலப்படுத்தி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.