ஈசூனில் சிட்டுக்குருவிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் நகர மன்றமும் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன. அந்தப் பறவைகளால் துர்நாற்றம் ஏற்படுவதாகவும் அவற்றின் எச்சம் காரணமாக அசுத்தம் ஏற்படுவதாகவும் குடியிருப்பாளர்கள் கூறுவதாக தெரியவந்துள்ளது. ஈசூன் அவென்யூ 7, ஈசூன் ஸ்திரீட் 11 ஆகியவற்றில் சிட்டுக்குருவிகள் அதிகமாக காணப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள புளோக்குகளில் நகர மன்றத்துடன் சேர்ந்து இந்த ஆணையம் துப்புரவுப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி நகர மன்றத்துக்கு பல தகவல்களை ஆணையம் தெரிவித்து உள்ளது.
குருவித் தொல்லை அகல முயற்சிகள்
1 mins read

