கப்பல்கள் மோதல்: கடலில் படிந்த எண்ணெய்யை அகற்றும் பாவனைப் பயிற்சி

கப்பல்கள் மோதல்: கடலில் படிந்த எண்ணெய்யை அகற்றும் பாவனைப் பயிற்சி

1 mins read

பூலாவ் செமாகாவ் அருகே சிங்கப் பூர் கடல் பகுதியில் நேற்று எண் ணெய்க் கப்பல்கள் மோதிக் கொண்டதைப் போன்ற பாவனை பயிற்சி நடத்தப்பட்டது. கப்பல்கள் மோதிக்கொண்ட தால் கடலில் எண்ணெய் படிந்து விட்டதைப்போன்ற சூழலும் பயிற்சியின்போது உருவாக்கப் பட்டது. பயிற்சியில் 26 அமைப்பு களைச் சேர்ந்த 250 பேருக்கும் அதிகமானோர் ஈடுபட்டனர். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் தலைமையில் பயிற்சி நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் கடலில் படிந்துவிட்ட எண்ணெய்யைச் சுத்தமாக அப் புறப்படுத்தும் ஆக்டோபஸ் என்ற ஒரு புதிய முறை பயன்படுத்தப் பட்டது. பயிற்சியில் C-130 விமான மும் போலிஸ் கடலோர காவல் படையும் கலந்துகொண்டன. பயிற்சி பற்றி கருத்து கூறிய இந்த ஆணையத்தின் உதவி தலைமை நிர்வாகி (செயல்முறை) கேப்டன் எம் சேகர், உலகின் ஆக சுறுசுறுப்புமிக்க துறைமுகங்களில் ஒன்றாக சிங்கப்பூர் இருப்பதைச் சுட்டினார்.