ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர், உலகத்திற்கு கடுமை யான எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது. இழுபறியாக நீளும் வர்த்தகப் போர் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்பு கடுமை யானதாக இருக்கும் என்று சிங்கப்பூர் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையில் அதிகரித்து வரும் வர்த்தகப் பிணக்குகள் காரணமாக தென்கிழக்கு ஆசியா கொஞ்சம் நன்மைகளை அடைந்து இருக் கிறது என்றாலும் இழுபறியாக அந்த வர்த்தகப் போர் நீடிப்பதால் உலகப் பொருளியலுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து பற்றி ஒவ்வொரு வரும் கவலைப்படவேண்டியுள்ளது என்று சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
கொஞ்ச காலத்திற்குச் சில நாடுகளுக்கு நன்மை ஏற்படலாம். சில நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட லாம். ஆனால் உலகப் பொருளிய லில் நம்பிக்கை போய்விடும் என்பதுதான் ஒவ்வொருவருக்கும் கவலை தருவதாக இருக்கிறது என்று புளூம்பர்க் தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் அமைச் சர் குறிப்பிட்டுள்ளார். "வர்த்தகப் போர் காரணமாக நிதிச் சந்தையில் பெரும் பாதிப்பு இருக்கும். பொருளியல் நட வடிக்கை அனைத்தையும் அது மந்தப்படுத்திவிடும்.

