நமக்கு நாமே உதவுகிறோம்; பிறருக்கு பலம் சேர்க்கிறோம்

நமக்கு நாமே உதவுகிறோம்; பிறருக்கு பலம் சேர்க்கிறோம்

1 mins read
aeda0001-1275-49d7-a162-dd7c6d7342a6
-

எஸ்.வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூரில் நமக்கு நாமே உதவிக் கொள்வதும் மற்றவர்களைப் பலப் படுத்துவதுமே இந்திய சமூக நிகழ்ச்சிகள் செயல்படும் முறை என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் முதன்மை நன்கொடை திட்டமான புரோஜெக்ட் கிவ், தனது நன் கொடைக் கூடாரத்தை லிட்டில் இந்தியாவில் உள்ள கேம்பல் லேன் பகுதியில் அமைத்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதிவரை செயல்படும் அந்தக் கூடாரத்தை திரு தர்மன் சண்முகரத்னம் நேற்றுப் பார்வையிட்டார்.

அந் நிகழ்ச்சியில் இந்த நன்கொடை திட்டத்தின் வழக்கமான, புதிய நன்கொடையாளர்கள், சமூக பங் காளிகள் கலந்துகொண்டனர். அவர்களிடையே பேசிய திரு தர்மன், ஒவ்வொருவரும் பல்வேறு வழிகளில் உதவுவதாகக் கூறினார். பிரச்சினைகளுக்கும் அவற்றுக்கான தீர்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்ற அவர், வாழ்க்கையில் மேடு பள்ளங்களை சந்தித்தாலும் பெரிய இந்திய சமூகம் என்ற முறையில் சிங்கப்பூருக்கு நாம் தொண் டாற்றுவதாகக் குறிப்பிட்டார்.

புரோஜெக்ட் கிவ் நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தன்னை வரவேற்கும் சிறுவர், சிறுமிகளுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். படம்: தமிழ் முரசு