$63,000 போதைப்பொருள் சிக்கியது; 8 பேர் கைது

$63,000 போதைப்பொருள் சிக்கியது; 8 பேர் கைது

1 mins read

கஞ்சா, ஐஸ், எக்டசி மாத்திரைகள், ஹெராயின் உள்ளிட்ட $63,000 மதிப்புள்ள போதைப் பொருள்களை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கைப்பற்றி உள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுகின்ற எட்டு பேர் கைதாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள். போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் லோரோங் 29 கேலாங்கில் அமைந்திருக்கும் தனியார் அடுக்குமாடி வீடு ஒன்றிலும் பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல் இருக்கும் ஓர் அடுக்குமாடி வீட்டிலும் சோதனை நடத்தியதில் அந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எட்டு பேர் கைதானார்கள் என்று அறிக்கை ஒன்றில் இந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. புலன்விசாரணைகள் தொடர்கின்றன.