பணிப்பெண்களின் பணத்தை முதலாளிகள் வைக்கலாகாது

பணிப்பெண்களின் பணத்தை முதலாளிகள் வைக்கலாகாது

1 mins read

வெளிநாட்டு பணிப்பெண்களுக் குத் தாங்கள் வழங்கும் ஊதியம் உட்பட எந்தப் பணத்தையும் பாதுகாப்பு உட்பட எந்தவொரு காரணத்துக்காகவும் முதலாளி கள் அடுத்த ஆண்டு முதல் வைத்துக்கொள்ளக் கூடாது. முதலாளிகளையும் வெளி நாட்டு பணிப்பெண்களையும் அவர்களுக்கு இடையேயான பணம் தொடர்பான பிரச்சினை களிலிருந்து பாதுகாப்பதற்காக புதிய வேலை அனுமதி கட்டுப் பாட்டை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று குறிப்பிட்டது. இல்லப் பணிப்பெண்களின் பணத்தை முதலாளிகள் வைத் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதலாளிகளுக்கு $10,000 வரை அபராதமும் 12 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். கடந்த மூன்றாண்டுகளில் பணிப்பெண்களுக்கான சம்பளம் தொடர்பாக ஆண்டுதோறும் சராசரியாக 600 புகார்களைப் பெற்றதாக இல்லப் பணிப் பெண்களுக்கான நிலையத்தில் (சிடிஇ) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கிடையில் பேசிய மனிதவள மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் கூறினார்.

பல்வேறு காரணங்களுக்காக பணிப்பெண்கள் தங்களது பணத்தை முதலாளிகள் பாதுகாப் பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், இந்த நடைமுறையை மனிதவள அமைச்சு ஊக்குவிப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார். பணிப்பெண்களுக்கு அளிக் கப்படும் ஊதியத்தை அவர்களே நிர்வகிக்க உதவும் விதத்தில் வங்கிக் கணக்கு தொடங்கு வதற்கு முதலாளிகள் உதவலாம் என திருவாட்டி லோ குறிப்பிட்டார்.