சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளில் எல்லா இன மக்களும் சரிசம விகிதத்தில் வசிக்கிறார்கள் என் பதை உறுதிப்படுத்த நடப்புக்கு வந்த இன ஒருங்கிணைப்புக் கொள்கை மீது இப்போது ஒருமித்த கவனம் திரும்பி இருக்கிறது. வீவக புளோக்கிலும் ஒரு வட் டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட இனத் தைச் சேர்ந்தவர்களுக்கான வீடு களின் விகிதாச்சாரத்தை அந்தக் கொள்கை வரையறுக்கிறது. நாடாளுமன்றத்தில் இன ஒருங் கிணைப்புக் கொள்கை பற்றி அண்மையில் நான்கு உறுப்பினர் கள் கவலை தெரிவித்தார்கள்.
சிங்கப்பூரில் இன நல்லிணக் கத்தை மேம்படுத்துவதில் அந்தக் கொள்கை உதவுகிறது. அதேநேரத்தில், அந்தக் கொள்கை காரணமாக வீட்டு உரிமையாளர்கள் சிலர் பாதிக்கப் படுகிறார்கள் என்றும் அவர்கள் தங்கள் வீடுகளை விரைவாகவோ அல்லது சந்தை மதிப்பிலோ விற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்றும் அந்த உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உறுப்பினர்களுக்கு மன்றத்தில் பதிலளித்துப் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், ஓர் அடுக்குமாடி வீட்டை விற்பதில் இந்தக் கொள்கை மட்டும்தான் முக்கியமானது என கூறமுடியாது என்றார்.
வீடு அமைந்திருக்கும் இடம், அதன் மாடி, வீட்டின் நிலவரம், எஞ்சியிருக்கும் குத்தகைக் காலம், சந்தை நிலவரங்கள் போன்றவை எல்லாம் ஒரு வீடு விலைபோவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றார் அமைச்சர். இன ஒருங்கிணைப்புக் கொள்கை காரணமாக தங்கள் வீடுகளை விற்க முடியாமல் திண்டாடும் வீவக வீட்டு உரிமை யாளர்களிடமிருந்து வீடுகளை அரசாங்கமே திரும்பி வாங்கிக் கொள்ளலாம் என்று மவுண்ட்பேட் டன் தொகுதி உறுப்பினர் தெரி வித்த யோசனையை அமைச்சர் நிராகரித்துவிட்டார்.

