மண்டாய் சதுப்புநிலம் மற்றும் முகத்துவாரம் 2022ல் பொது மக்களுக்குத் திறந்துவிடப்படும் போது இயற்கைவள விரும்பிகளுக் கும் பறவை ரசிகர்களுக்கும் பல வசதிகளுடன் ஒரு புதிய பூங்கா கிடைக்கவிருக்கிறது. சுங்கை பூலோ ஈரநில காட்டுப் பகுதியின் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அந்த முகத்துவாரம், இயற்கை பூங்கா வாக வடிவமைக்கப்படும் என்று இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று அறிவித்தார்.
சிங்கப்பூரில் ஈரநில உயிரின பாதுகாப்பைப் பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது என்றார் அவர். அந்தப் புதிய 72.8 ஹெக்டர் பூங்கா, புதிதாகக் கட்டப்படவிருக் கும் இரண்டு பொழுதுபோக்கு வழித்தடங்களின் நெடுகே அமைந் திருக்கும். அந்த முகத்துவாரப் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை கடந்த அக்டோபரில் தேசிய பூங்காக் கழகம் ஏற்றுக்கொண்டது. அந்த இயற்கை நிலப்பகுதிக்குப் பலரும் செல்வர் என்பதால் அங்கு மனிதர்கள் நடமாட்டத்தால் ஏற் படக்கூடிய தாக்கங்களைக் கூடு மானவரையில் குறைத்துக்கொள் ளும் வகையில் அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.
மண்டாய் சதுப்பு நிலம் மற்றும் முகத்துவார பகுதி. தேசிய பூங்காக் கழகம் நேற்று கொண்டாடிய சுங்கை பூலோ ஈரநில காட்டுப்பகுதியின் 25வது ஆண்டுவிழாவில் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

