பொங்கோல் நகர மையம் 2021ல் திறக்கப்படும். அதில் ஒரே கூரை யின் கீழ் புதுப்புது வசதிகளையும் செயல்திட்டங்களையும் பொங் கோல் குடியிருப்பாளர்கள் எதிர் பார்க்கலாம். உணவங்காடி நிலையம், வட் டார நூலகம், சிறார் பராமரிப்பு நிலையம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் முதலானவை புதிய அம்சங்களில் இடம்பெறும். அந்த மையத்தில், புதுப்பிக்கப் பட்ட பொங்கோல் விஸ்தா சமூக மன்றமும் அமைந்திருக்கும். இப்போது அங்கு வெற்றுத் தளத் தில் செயல்படும் சமூக நிலை யத்தைவிட புதிய மன்றம் ஏழு மடங்கு பெரிதாக இருக்கும். வாட்டர்வே பாயிண்ட் கடைத் தொகுதி கட்டடத்திற்கு எதிரே புதிய மையம் அமையும். அது புதி தாக அமையவிருக்கும் பொங் கோல் வட்டார விளையாட்டு நிலையத்திற்குப் பக்கத்தில் இடம் பெற்று இருக்கும்.
துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், அமைச்சர் சான் சுன் சிங், அடித்தள அமைப்பு ஆலோசகர்கள் ஆகியோர் பொங்கோல் நகர மைய மாதிரியைப் பார்வை யிடுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

