தொடர்புத் திறன் குறைபாடு மாணவன் மீது பந்தை வீசிய ஆசிரியருக்குச் சிறை

1 mins read

தொடர்புத்திறன் குறைபாடு உள்ள 9 வயது மாணவர் மீது பந்தை வீசி எறிந்ததுடன் அந்த மாணவனை உடற்பயிற்சி சாதனங் கள் வைத்திருக்கும் அறையில் அடைத்து வைக்கப் போவதாக மிரட்டிய ஆசிரியருக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும் $3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த 33 வயது ஆசிரியருக்கு குடும்பப் பிரச்சினைகள் இருப்பதாக அறியப்படுகிறது. அவர் அந்த சிறுவனின் தலையில் வாலிபாலை விட்டெறிந்ததுடன் அந்தச் சிறுவனை பள்ளி உடற்பயிற்சி சாதனங்கள் வைத்திருக்கும் அறையில் விளக்குகள், மின் விசிறி அணைக்கப்பட்ட நிலையில் தடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு பற்றி பள்ளி உடற்பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு பின் நடந்ததாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறுவனின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் பொருட்டு, சிறுவன், ஆசிரியர் ஆகிய இருவரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. கவனம் வேண்டி அதீத சுறுசுறுப்புடன் இயங்கும் குறை பாடு உள்ளதாகக் கூறப்படும் அந்தச் சிறுவன் தமது பள்ளி வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்ததாக செய்தித் தகவல் கூறுகிறது. இதற்காக அந்த மாணவனின் தலையில் வாலிபாலை மூன்று முறை அந்த ஆசிரியர் விட் டெறிந்தார். பின்னர், பள்ளி உடற்பயிற்சி சாதனங்கள் வைக்கப் பயன்படும் கூண்டில் அவனை அடைத்து வைக்கப்போவதாக மிரட்டியதுடன், அவ்வாறு செய்யலாமா என மற்ற மாணவர்களைக் கேட்டதாகவும் அறியப்படுகிறது.