உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் விபத்து: மோட்டார் சைக்கிளோட்டி பலி

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் விபத்து: மோட்டார் சைக்கிளோட்டி பலி

1 mins read
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் நேற்று நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார். இறந்தவருக்கு 35 வயது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் தமது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின்மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணி அளவில் நிகழ்ந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாக போலிசார் தெரிவித்தனர். அவர்கள் 19 வயதுக்கும் 28 வயதுக்கும் உட்பட்டவர்கள். மூவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.