நேர்மைற்ற செயல்பாடு ஏதும் நிகழவில்லை - பாட்டாளிக் கட்சி

நேர்மைற்ற செயல்பாடு ஏதும் நிகழவில்லை - பாட்டாளிக் கட்சி

2 mins read
207dc9c0-0f66-4e4c-8088-da455bfceb25
-
Google News Preferred Icon

பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்மின் ஒப்பதலுக்குப் பிறகே அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிர்வாக முகவ ரான எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத் திடம் பணம் கொடுக்கப்பட்டதாக தற்காப்பு வழக்கறிஞர் லெஸ்லி நெட்டோ நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். முறையற்ற நிதி நிர்வாகம் தொடர்பில் பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம், தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங், முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், நகர மன்றத்தின் இரண்டு அதிகாரிகள், எஃப்எம் எஸ்எஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திருவாட்டி ஹாவ் வெங் ஃபான் ஆகியோருக்கு எதிராக அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் வழக்கு தொடுத்துள்ளது.

நேற்று இரண்டாவது நாள் வழக்கு விசாரணை நடைபெற்றது. நகர மன்றத்தின் நிர்வாகத்தில் அதன் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் முழு ஈடுபாட்டுடன் இருந் ததாகவும் எஃப்எம்எஸ்எஸ் நிறுவனம் அதன் பணிகளைத் திருப்திகரமான முறையில் செய்வதை அவர்கள் உறுதி செய்த தாகவும் திருவாட்டி ஹாவைப் பிரதிநிதிக்கும் திரு நெட்டோ கூறினார். திருவாட்டி சில்வியா லிம் நிதி ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே பணம் செலுத்த ஒப்புதல் அளித்தார் என்றார் அவர். பாட்டாளிக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களைக் குற்றம் சொல்லும் நோக்குடன் நகர மன்றத்தின் நிதி நிர்வாகத்தைக் கண்டறிய நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கைகள் தயாரிக் கப்பட்டதாக திரு நெட்டோ வாதிட் டார்.

உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும் பாட்டாளிக் கட்சியின் (இடமிருந்து) திரு பிரித்தம் சிங், திரு லோ தியா கியாங், திருவாட்டி சில்வியா லிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்