சமூக ஆர்வலர், எதிர்க்கட்சி உறுப்பினருக்கு எதிராக தீர்ப்பு

சமூக ஆர்வலர், எதிர்க்கட்சி உறுப்பினருக்கு எதிராக தீர்ப்பு

2 mins read
f566271f-d818-4702-9e3b-7cd6b7a16c4b
-
Google News Preferred Icon

சமூக ஆர்வலர் ஜோலோவன் வாமும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஜான் டானும் தங்களது ஃபே ஸ்புக் பதிவுகளில் நீதிமன்றத் தை அவமதித்ததாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் சிங்கப்பூர் நீதி மன்றங்களின் நேர்மையையும் பாரபட் சமின்மையையும் தாக்கும்விதமான கருத்துகளை வெளியிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி வூ பீ லீ தெரிவித்தார். அரசியல் தொடர்பான வழக்குகளில் மலேசிய நீதி மன் றங் களைப் போல் அன்றி சிங்கப்பூர் நீதிமன்றங்கள் சுயேட்சையாக இல்லை என்று வாம் ஏப்ரல் 27ஆம் தேதியில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் எழுதினார்.

மலேசியாவின் போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டம் அந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் 'மலேசியாகினி' இணைய செய்தித்தளம் தொடர்ந்த வழக்கு பற்றிய கட்டுரை, ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தது. இந்தப்பதிவின் கருத்துகளுக்கான பகுதியில் வாம் தமது கருத்துகளை எழுதினார். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், வாமுக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்தது. தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் நட வடிக்கை, வாம் எழுதியுள்ளதை உறுதிப்படுத்துவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

நீதி அமலாக்க பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடந்தாண்டு அக்டோபரில் நடப்புக்குக் கொண்டு வரப்பட்ட புதிய நீதிமன்ற அவமதிப்புச் சட்டங்களின்படி அவ ர்கள் குற்றச்சாட்டப்பட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய சட்டங்களின்கீழ் ஜோலோவன் வாம் (இடது), ஜான் டான் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்