விபத்திற்குள்ளான ஓ ட்டுநர்; உதவிக்கரம் நீட்டிய மருத்துவர்

விபத்திற்குள்ளான ஓ ட்டுநர்; உதவிக்கரம் நீட்டிய மருத்துவர்

1 mins read
9226d003-f1fd-4aad-b2bd-dfa3765785b8
-

லாவ் பா சாட் நிலையத்திற்கு அருகிலுள்ள சாலை ஒன்றில் மோட்டார் சைக் கிளோட்டி ஒரு வர் கீழே விழுந்து கிடந்ததை மருத் துவர் ஒருவரும் அவருடன் இருந்த தாதியும் கண்டனர். அப்போது டாக்டர் ஷ்ரவண் வர்மாவும் அந்தத் தாதியும் நோயாளி ஒருவரைப் பார்ப் பதற்காக காரில் ஜூரோங் வட்டாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மருத்துவ உதவி வாகனம் வரும்வரை, ஆடவருக்கு சிகிச்சை அளிக்க 30 வயது டாக்டர் வர்மா முடிவெடுத்தார்.

24 மணி நேர மருத்துவ சிகிச்சை சேவை வழங்கும் அவருடன் எப்போதும் மருத்துவ சிகிச்சைக் கருவிகள் இருப்பதால் விபத்துக்குள்ளானவருக்கு சிகிச்சை அளிக்க முடிந்ததாக அவர் 'தி நியூபேப்பர்' நாளிதழிடம் தெரிவித்தார். கிராஸ் ஸ்திரீட்டுக்கும் ராஃபிள்ஸ் கீக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த ஒரு விபத்து குறித்த தகவல் 9.55 மணிக்கு வந்ததாக போலிசார் தெரிவித்தனர். விபத்தில் மோட் டார் சைக்கிள் டாக்சியுடன் மோதியது. காயமடைந்த 32 வயது மோட்டார் சைக்கிளோட்டி சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் வர்மாவுக்கு உதவியாக சில வழிப்போக்கர்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவ உதவி அளிக்கும் டாக்டர் ஷ்ரவண் வர்மா. படம்: தி நியூ பேப்பர்