பேருந்து நிறுத்த இருக்கையை திருடிய இளையர்

1 mins read
3fe09d6a-a1aa-4ba7-8571-1b24bfadb099
-

பேருந்து நிறுத்தம்போல தமது வீட்டை மாற்றி அமைக்க நினைத்த 22 வயது டான் கீ வீ, பிரேடல் ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து $1,500 மதிப்புள்ள சாம்பல் நிற இருக்கையைப் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ஆடவருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக் கப்பட்டது. கடந்த ஜூன் 14ஆம் தேதி, நள்ளிரவில் பேருந்துக்காகக் காத் திருந்த போது டான் இருக்கையின் திருகாணிகளைக் கைகளாலேயே கழட்டி, அதனை குப்பை போடும் பையில் சுற்றி டாக்சியில் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். யாரோ ஒருவர் இருக்கையை கழட்டுவதைப் பார்த்ததாக சிலர் கொடுத்த தகவலின் அடிப்படை யில் போலிசார் டானின் வீட்டுக்குச் சென்றுபோது பையில் சுற்றியிருந்த இருக்கையைப் பார்த்தனர். இந்தக் குற்றத்திற்காக இவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம். படம்: LIANHE ZAOBAO