தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 16ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை அஞ்சல் தலைகளுக்கும் அஞ்சல் அட்டைகளுக்கும் சிங்போஸ்ட் கட்டண சலுகை அளிக்கிறது. மலேசியா, புரூணை நாடுகளுக்கு அப்பால் அஞ்சல் அட்டைகளை (40 கிராம் எடை வரை) அனுப்ப 70 காசு கட்டணம். இதனால் 65 காசு வரை மிச்சமாகும். வழக்கமான அளவில் இல்லாத வாழ்த்து அட்டைகளை சிங்கப்பூர் முகவரிக்கு அனுப்ப கட்டணம் 60 காசிலிருந்து 30 காசு (20 கிராம்), 37 காசு (40 கிராம் வரை) ஆகக் குறையும்.
விழாக்கால அஞ்சல் கட்டண சலுகை
1 mins read
-

