தாக்கப்பட்ட அரிய மீன்கொத்திப் பறவை மீண்டும் விடுவிக்கப்பட்டது

தாக்கப்பட்ட அரிய மீன்கொத்திப் பறவை மீண்டும் விடுவிக்கப்பட்டது

1 mins read
3633e78c-6057-432c-95c4-9d6d1b364712
-
Google News Preferred Icon

பல புகைப்படக்காரர்களை கரையோரப் பூந்தோட்டங்களுக்குச் சுண்டியிழுத்து வரும் அரிய, மீன்கொத்திப் பறவை ஒன்று மற்றொரு பறவையால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் விடுவிக்கப்பட்டது. இந்த வலசைப் பறவையை கிட்டத்தட்ட 50 புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, மீன்கொத்திப் பறவையைவிட பெரிதான, நீர்க் கோழி ஒன்று பின்னாலிருந்து முட்டித் தாக்கியதில், தாக்கப்பட்ட பறவையின் தலை சிறிது நேரம் சேற்றில் மாட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது. பறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பறவை, பின்னர் காப்பாற்றப்பட்டு தேவையான பராமரிப்பைப் பெற்றது. மறுநாள் விடுவிக்கப்பட்ட அப்பறவை மீண்டும் தன் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புமின்றி ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. PHOTO: GEOFF LIM