சட்டவிரோத குதிரைப் பந்தய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தீவு முழுதும் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர். குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, போலிஸ் படையின் நிலப்பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். கிங் ஜார்ஜ்ஸ் அவென்யூ, டெபான் கார்டன்ஸ் ரோடு, வாம்போ டிரைவ், அங் மோ கியோ, யூனோஸ், பூன் லே ஆகிய இடங்களில் இந்தச் சோதனைகள் நடந்தன. கைதான பேர்களில் 27 ஆடவர்கள்; நால்வர் பெண்கள்.
சட்டவிரோத குதிரைப் பந்தய சூதாட்டம்; 31 பேர் கைது
1 mins read
-

