பாட்டாளிக் கட்சியினர்: $106,000 முறைகேடாக கொடுக்கப்படவில்லை

1 mins read
800d3791-ff1c-498b-85bd-e92da907deb1
-

முன்னதாக பாட்டாளிக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த அல் ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம், தனக்கு முகவராக நியமித்த எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்திற்கு $106,000 கொடுத்ததைத் காட்டும் செலவுக் கணக்கு குறித்து, பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இந்தக் கட்டணத்தின் தொ டர் பில் எந்த ஒப்பந்தமும் செய்யப்ப டாததால் இந்தப் பணம் முறை கேடாக கொடுக்கப்பட்டது என்று 2016ஆம் ஆண்டில் கணக்காய் வாளர்கள் முடிவு செய்ததை மறுப்பதாக, பாட்டாளிக் கட்சி யினரைப் பிரதிநிதிக்கும் தற்காப்பு வழக்கறிஞர் செல்வராஜா தெரிவித்தார். இந்தத் தொகையிலிருந்து ஒரு பகுதி, ஹவ்காங் நகர மன்ற ஊழியர்களுக்கான சம்பளங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அவர் களுக்கு இந்தச் சம்பளம் கொடுக்கப்பட்டதாக திரு ராஜா கூறினார்.

(இடமிருந்து) பாட்டாளிக்கட்சியின் தலைமை செயலாளர் பிரித்தம் சிங், முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், தற்போதைய தலைவர் சில்வியா லிம் உள்ளிட்டோர் மீது அல்ஜுனிட்=ஹவ்காங் நகர மன்றம் வழக்கு தொடுத்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்