பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களுக்கு சிகரெட் விற்ற ஆறு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது. புகையிலைப் பொருட்களை ஆறு மாத காலத்திற்கு விற்கக் கூடாது என அந்தக் கடைகளுக்கு இடைக் காலத் தடை விதிக்கப்பட்டுள்ள தாகவும் அந்தத் தடை உத்தரவு கடந்த ஜூலை மாதத்திற்கும் செப் டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நடப்புக்கு வந்ததாகவும் அது குறிப்பிட்டது.
தடை விதிக்கப்பட்ட கடைகளில் 639 பொங்கோல் டிரைவ், 319ஏ ஆங்கர்வேல் டிரைவ் ஆகிய பகுதி களிலுள்ள 7=லெவன் கடைகளும் அடங்கும். தேபான் கார்டன்ஸ் ரோட்டில் உள்ள எஸ்எம் மார்ட், காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் உள்ள இப்ராஹிம் டிரேடிங், புக்கிட் பாத் தோக் ஸ்திரீட் 22ல் உள்ள குயி பின் மினிமார்ட், சுவா சூ காங் நார்த் 5ல் உள்ள பிக் ரீடெய்ல் சூப்பர் மார்க்கெட்ஸ் ஆகியன இதர நான்கு கடைகள்.
தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட கடைகளில் ஒன்றான 319ஏ ஆங்கர் வேல் டிரைவில் உள்ள 7-=லெவன். படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

