பொருளியல் பதற்ற சூழல் இல்லை

பொருளியல் பதற்ற சூழல் இல்லை

1 mins read
72392568-ef98-46e1-89d8-b70aa18c5a85
-

உலகப் பொருளியல் இடர்ப்பாடுகள் அதிகரித்துள்ளபோதிலும் அதற்காகப் பதற்றப்பட வேண்டியதில்லை என சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரி வித்துள்ளார். "கருமேகங்கள் சூழ்ந்திருந்தாலும் இன்னும் மழை பொழியவில்லை," என்று 'புளூம் பெர்க்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப் பிட்டார். "பொருளியல் நிலவரம் அளவுக்கு அதிகமாகப் பிரகாசிக் கும் என்று நான் கருதவில்லை. அதேநேரம் இப்போதைய நிலவரத்தைக் கண்டு அதிகம் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை," என்றார் அவர். அமெரிக்கா, சீனா இடையே உருவாகி இருக்கும் வர்த்தகப் பதற்றம் பற்றி குறிப்பிடுகையில் திரு மேனன் இதனைத் தெரிவித்தார்.