இடுப்பில் மறைக்கப்பட்ட சிகரெட்: ஆடவருக்கு $900 அபராதம்

இடுப்பில் மறைக்கப்பட்ட சிகரெட்: ஆடவருக்கு $900 அபராதம்

1 mins read
768e2762-e2e1-4eac-a0c5-018b4e997a4a
-

சிகரெட்டுகளை கால்சட்டைக்குள் மறைத்து சிங்கப் பூருக்குள் கொண்டு வர முயன்ற ஆட வருக்கு நேற்று நீதிமன்றத்தில் 900 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி யில் அவர் பிடிபட் டார். இந்த விவ ரத்தை குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

மலேசிய ஒர்க் பர்மிட் வைத்திருந்த அந்த 39 வயது ஆடவரின் இடுப்புப் பகுதி வழக்கத்திற்கு மாறாக வித்தி யாசமாக இருந்ததைத் தொடர்ந்து அதிகாரிகளுக்குச் சந்தே கம் எழுந்தது. அவரை சோதனை செய்தபோது வரி செலுத் தப்படாத மூன்று சிகரெட் பாக்கெட்டுகள் காற்சட்டையின் இடுப்புப் பகுதியிலும் ஒரு சிகரெட் பாக்கெட் அவரது பையிலும் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரண் டாவது கள்ள சிகரெட் கடத்தல் சம்பவம் இது. ஆறு சிகரெட் பாக்கெட்டுகளைக் கடத்தி வர முயன்ற ஆடவருக்கு நேற்று முன்தினம் 1,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.