உலகின் ஆக வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூருக்கு இரண்டாமிடம்

உலகின் ஆக வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூருக்கு இரண்டாமிடம்

1 mins read
9bb4d099-f40c-4718-99b4-89fe20ac240e
-
Google News Preferred Icon

உலகின் ஆக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்னும் சிறப்பை சிங்கப்பூரிடம் இருந்து ஜப்பான் தட்டிப் பறித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஹென்லி மற்றும் பங்காளிகள் நிறுவனம் நேற்று தெரிவித்தது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத் திருப்போர் இம்மாதத் தொடக்கத் தில் இருந்து மியன்மாருக்கு விசா இன்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசா இன்றி அல்லது வருகை விசாவில் ஜப்பானியர் செல்லக் கூடிய இடங்களின் எண்ணிக்கை 190க்கு உயர்ந்தது. அதன் காரணமாக, இந்த வசதியை 189 இடங்களுக்குப் பெற்று குறியீட்டின் முதலிடத்தில் இருந்து வந்த சிங்கப்பூர் இரண் டாம் இடத்துக்கு இறங்கிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இவ் விரண்டு நாடுகளும் ஒன்றுக் கொன்று சரிசம போட்டியில் இருந்ததாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது. குறியீட்டில் இதுவரை இரண் டாம் இடத்தில் இருந்த ஜெர்மனி மூன்றாம் இடத்திற்கு இறங்கி தென்கொரியா, பிரான்ஸ் ஆகிய வற்றின் குறியீட்டோடு இணைந் தது. பட்டியலின் நான்காம் இடத் தில் டென்மார்க், ஃபின்லாந்து, இத்தாலி, சுவீடன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. அவற் றின் குடிமக்கள் விசா இன்றியோ வருகை விசாவிலோ செல்லக் கூடிய இடங்களின் எண்ணிக்கை 187.