தனியார் மற்றும் வீவக சொத்துகளின் வாடகைச் சந்தையில் மந்த நிலை நீடிக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கூட்டுரிமை வீடுகளுக்கும் தனியார் வீடுகளுக்குமான வாடகை சென்ற மாதம் 0.4 விழுக்காடு இறங்கியதாக சொத்துச் சந்தை இணையத்தளமான எஸ்ஆர்எக்ஸ் கூறியது. கடந்த ஆண்டு செப்டம்பரைக் காட்டிலும் இது 0.1 விழுக்காடு குறைவு. தனியார் சொத்துகள் வாடகை நிலவரம் கடந்த 2013 ஜனவரியில் உச்சத்திற்குச் சென் றது. அதன் பிறகு அதில் 19.4 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டு உள் ளது. இருப்பினும் வாடகைக்கு விடப் பட்ட கூட்டுரிமை, தனியார் வீடு களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 4,126 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இவ்வாண்டு செப்டம்பரில் அந்த எண்ணிக்கை 1.8 விழுக் காடு அதிகரித்து 4,199 ஆனது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை விகிதம் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் சென்ற மாதம் 0.5 விழுக்காடு இறங்கியது.
வீவக, தனியார் வீடுகளின் வாடகை நிலவரத்தில் மந்தம் நீடிப்பதாகத் தகவல்
1 mins read
-

