தரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்

தரையிறங்கிய உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்

1 mins read
70293311-0b25-48a0-92d4-b3ab7d3b62c6
-

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) SQ22 விமானம், 17 மணி நேர 52 நிமிடங்கள் கழித்து, சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அமெரிக்கா, நியூ ஜெர்சியின் நியூவார்க் லிபர்ட்டி அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங் கியது. இதன் மூலம் உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானப் பய ணத்தை மேற்கொண்டு எஸ்ஐஏ சாதனை படைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயந் திர வசதியுடைய A350=900ULR ரக விமானம் இந்தச் சேவையை வழங்கியது.

இந்த விமானத்தில் 150 பயணி களும் 17 விமான ஊழியர்களும் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. விமானத்தின் பயணம் நீண்ட நேரம் என்பதால் ஆரோக்கிய உணவு, 100 மணி நேரத்துக்கு மேல் பொழுதைக் கழிக்கக்கூடிய அளவுக்கு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள். சிங்கப்பூருக்கும் நியூவார்க் நகருக்கும் இடையே 16,700 கிலோ மீட்டர் தொலைவைப் பய ணிகள் உற்சாகத்துடன் கடக்க அவை உதவும்.

அமெரிக்காவின் நியூவார்க் நகருக்குப் பறக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கும் பயணிகள். படம்: சாவ்பாவ்