நாட்டின் கடற்பகுதியைப் பாதுகாக்க புதிய திட்டம்

சிங்கப்பூரின் கடற்பகுதியைப் பாது காப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, விரிவான புதிய திட்டம் ஒன்றை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரைந்துள்ளனர். சதுப்புநிலங்கள் முதல் பவளப் பாறைகள் வரை இத்திட்டம் பாது காக்கும். 'புளூ பிளான்' எனப்படும் இந்தத் திட்டத்தின் மூன்றாவது பதிப்பு ஆறு பரிந்துரைகளை முன்வை த்துள்ளது. கடல் சுற்றுச்சூழல் பகுதி களைப் பாதுகாக்க மேம் படுத் தப்ப ட்ட சட்டங்களை உருவாக்குவது, இப்பகுதிகளுக்கான வரைய றுக்கப்பட்ட நிர்வாக நடை முறையை அமைப்பது, நீண்டகால ஆய்வு மற்றும் கண்காணிப்புத் திட்டங்களுக்காக தொடர்ந்து நிதி வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.

அமைப்புகளுக்கும் ஆய்வாளர் களுக்கும் இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பையும் இத்திட்டம் நாடுகிறது. அத்துடன் கடல்வாழ் உயிரி னங்களின் எஞ்சிய இருப் பிடங்க ளைப் பாதுகாக்க கூடுதல் நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படவும் இந்த உயிரினங்களின் இருப்பி டங்கள் குறித்த தகவல் களை பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யவும் இத்திட்டம் அழைப்பு விடுக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாவது பதிப்புக்கு 100 பேருக்கும் அதிக மானோர் பங்களித்துள்ளனர். உயிரியல் நிபுணர்கள், புவியியல் நிபுணர்கள், சுற்றுச்சூழல் வழக் கறிஞர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.

220 பக்கங்கள் கொண்ட இந்தத் திட்டம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடம் சமர்ப்பிக்கப்ப ட்டது. "கரையோரப் பகுதிகளிலும் நீரிலும் வாழும் இந்த அற்புதமான உயிரியல் பன்முகத்தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும்," என்றார் சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சருமான திரு லீ. வசதிகுறைந்த பிள்ளைகளுக்காக $15,000 நிதி திரட்டிய பாலர்கள் புக்கிட் பாத்தோக்கில் உள்ள தமது வீட்டில் விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடி சனிக்கிழமை பொழுதைக் கழிப்ப தற்கு பதிலாக பாசிர் ரிசில் சாவிக்கொத்துகளை விற்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான் ஆறு வயது ஹோன் ஹோக் ரோங். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழின் பள்ளிக் கைக்காசு நிதிக்கா கவும் பிஸ்னஸ் டைம்ஸ் நாளி தழின் வளர்ந்துவரும் கலைஞர் நிதிக்காகவும் நிதி திரட்ட டவுன் டௌன் ஈஸ்ட்டில் உள்ள கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் அவன் கலந்துகொண்டான்.

இந்த நிகழ்ச்சிக்கு ஸ்டார் லர்னர்ஸ் பாலர் பள்ளி ஏற்பாடு செய்து இருந்தது. "போதிய பண வசதி இல்லா தோருக்கு உதவ நான் இந்த நற்காரியத்தைச் செய்ய விரும் பினேன்," என்றான் ஹோக் ரோங். சுமார் 2,000 பிள்ளைகளும் பெற்றோரும் பங்கேற்ற இந்தக் கேளிக்கை நிகழ்ச்சியில் ஏறக் குறைய $15,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 20க்கும் அதிக மான கூடங்களைச் சிறுவர்கள் நிர்வகித்தனர். "தினசரி வீரர்களைக் கொண் டாடுவதைப் பற்றியதே இந்த நிகழ்ச்சி. பண்புநெறிகளை வளர்ப்ப து என்பது எங்களது பாடத்திட் டத்தில் முக்கிய அம்சமாக உள்ள து. கல்வி என்பது ஏட்டுக்கல்வி யுடன் நின்றுவிடாது," என்று ஸ்டார் லர்னர்ஸ் பாலர் பள்ளியின் தலைமை நிர்வாகி டான் மெங் வெய் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதிக்கு நன்கொடை வழங்குவதற்கான காரணம் குறித்தும் கருத்துரைத்த அவர், "பணம் எங்கு செல்கிறது என் பதை நாங்கள் தெரிந்துகொள்ள முடியும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!