வேலை செய்வோர் படிக்க என்டியுவின் புதிய செயலி

வேலை செய்வோர் படிக்க என்டியுவின் புதிய செயலி

1 mins read

வேலைக்குச் செல்லும் நிபுணர் களை இலக்காகக் கொண்ட புதிய கைபேசி செயலியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியில் எட்டு வகையான பாடங்கள் உள்ளடங்கு கின்றன. பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும் பொது மக்களும் இந்தப் பாடங்களைப் படிக்கலாம். தரவு பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இந்தப் பாடங்கள் அடங்கும். ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடிக்க சுமார் ஏழு மணி நேரம் எடுக்கும். அதற்கான செலவு $400 முதல் $500 வரை. சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் 'ஸ்கில்ஸ் ஃபியூ ச்சர்' திட்டத்தைக் கொண்டு 70 விழுக்காடு கட்டணச் சலுகை களைப் பெறலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 விழுக்காடு வரையிலான கட்டணக் கழிவைப் பெறலாம். என்டியுவின் முன்னாள் மாணவர்களுக்கு $1,600 வரை உதவித் தொகையும் கிடைக்கும்.