கத்திக்குத்து ஆடவர் மீது குற்றச்சாட்டு

கத்திக்குத்து ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

குவீன்ஸ்டவுனில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் வெற்றுத் தளத்தில் ஒரு மாதை கத்தியால் குத்தியதாக நேற்று நீதிமன்றத் தில் ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முகம்மது ஃபைசல் முகம்மது சாலே, 29, என்ற அந்த ஆடவர் மீது, கடுமையான காயத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திய தாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது-. மெய் லிங் ஸ்திரீட்டில் இருக் கும் 146வது புளோக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 11.45 மணிக்கு நூர்டிலா ஃபடிலா என்ற 20க்கும் அதிக வயதுள்ள மாது தாக்கப்பட்டார்.

அதனையடுத்து அந்த மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை யில் அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவ ருடைய நிலைமை சீராக இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கியவருக்கும் தாக்கப் பட்டவருக்கும் இடையில் சொந்த பிரச்சினைகள் காரணமாக அந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்ப தாக தெரியவந்துள்ளது. கிளமெண்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அந்த ஆட வரைக் கைதுசெய்தார்கள். விசா ரணைகளும் பிரத்தியேக படச் சாதனப் பதிவுகளும் அந்த நபர் பிடிபட உதவின.