சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்யும் ஒரு தில்லுமுல்லு காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் தைவானை சேர்ந்த மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த மோசடியில் சிக்கிய ஒருவர் $1.72 மில்லியன் ஏமாற்றப் பட்டு இருக்கிறார் என்று தெரி விக்கப்படுகிறது. கைதுசெய்யப் பட்ட ஆடவர்களுக்கு வயது 24 முதல் 26 வரை என்று போலிஸ் நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
தன்னிடம் இருந்து $1.7 மில்லியன் பணத்தை ஏமாற்றிவிட் டார்கள் என்று 34 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை போலி சிடம் புகார் தெரிவித்தார். சீன அதிகாரிகள் போன்று நடித்து ஏமாற்றும் மோசடி காரியங் களில் தனி ஒரு மோசடியில் இந்த அளவுக்கு அதிக தொகை இப் போதுதான் ஏமாற்றப்பட்டு இருப்ப தாகத் தெரிகிறது என்று ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. பணத்தை ஏமாந்த நபருக்கு செவ்வாய்க்கிழமை ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. சீன போலிஸ் அதிகாரி என்று தன்னைக் கூறிக்கொண்ட ஒருவர் அவரிடம் பேசினார். அனைத்துலக தில்லுமுல்லு காரியம் ஒன்றில் சிக்கியிருப்பதாகவும் புலன்விசார ணைக்காக எல்லா பணத்தையும் ஒப்படைக்கும்படியும் அந்த அப்பாவி நபரிடம் அந்தப் போலி ஆசாமி தெரிவித்தார்.

