சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் 'ரோலிங் குட் டைம்ஸ்' எனும் திட்டத்தின் வழியாக வயதான வர்களுக்குச் சில பாதுகாப்பு உத்திகள் கற்றுக்கொடுக்கப்பட உள்ளன. கீழே விழக்கூடிய சூழல் அவர்களுக்கு உருவா னால் காயங்கள் ஏற்படுவதை இந்த உத்திகளின் மூலம் குறைக்க முடியும். ஐம்பது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்காக வடி வமைக்கப்பட்டுள்ள இந்தத் திட் டத்தில் தசையை வலுப்படுத்த பயிற்சிகள், காயங்களைக் குறைக்க உதவக்கூடிய 'உரு ளும்' உத்திகள் என இரு பகுதிகள் உள்ளன.
பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியில் பரிசோதனை முறை யில் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தை நேற்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் அறிவித்தார். சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் இயன் மருத்துவச் சங்கம், மக்கள் கழகம் ஆகியனவும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றன. கீழே விழுவதன் மூலம் முதியவர்களுக்கு எலும்புமுறிவு, இடம்பெயர்வதில் சிரமம் போன் றவை ஏற்படக்கூடும். வாழ்க்கைத் தரத்தை அது பெரிதும் பாதிக்கக் கூடும். எதிர்வரும் 2030ஆம் ஆண் டுக்குள் சுமார் ஒரு மில்லியன் சிங்கப்பூரர்கள் 65 வயதைக் கடந்திருப்பர் என்று குறிப்பிட்ட அமைச்சர் இங், சிங்கப்பூரர்களில் நான்கில் ஒரு பங்கு அது என்றார்.

