சாஃப்ரா நன்னம்பிக்கை நீச்சலில் சாதனை அளவாக 2,300 பேர்

சாஃப்ரா நன்னம்பிக்கை நீச்சலில் சாதனை அளவாக 2,300 பேர்

1 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஆயுதப்படை பொழுதுபோக்குச் சங்கமான சாஃப்ரா அமைப்பின் 'நன்னம்பிக்கை நீச்சல்' நிகழ்ச்சியில் இந்த ஆண்டு சாதனை அளவாக 2,300 பேருக்கும் மேற்பட்ட தேசிய சேவையாளர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் பங்கேற்றனர். அவர்கள் அறப்பணிக்காக $154,000க்கு மேற்பட்ட தொகையைத் திரட்டி இருக்கிறார்கள். இந்த நன்னம்பிக்கை நீச்சல் நிகழ்ச்சி நான்கு சாஃப்ரா மனமகிழ் மன்றங்களில் இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. முதல் தடவையாக இளையர்கள் பிரிவு ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய சேவையாளர்களின் ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறப்பணிக்கு உதவும் நோக்கத்தில், இந்தப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 98 சிறார்கள் கலந்துகொண்டார்கள்.