விளக்குக் கம்பத்தில் மோதிய பந்தய கார்

விளக்குக் கம்பத்தில் மோதிய பந்தய கார்

1 mins read
e209ff8b-2ac6-4fde-aceb-3cfbcf746dcb
-

நியூ பிரிட்ஜ் ரோடும் கண்டோன்மென்ட் ரோடும் சந்திக்கும் இடத்தில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து ஒரு பிஎம்டபிள்யூ பந்தய கார் போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோதிவிட்டது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் காயம் அடைந்த 58 வயது கார் ஓட்டுநர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. காயம் அடைந்தவர் பிஎம்டபிள்யூ காரை ஓட்டிவந்தவர் என்று தெரிகிறது. விபத்தில் சிக்கிய வேறு ஒரு வாகனம், டொயோட்டா கார் என்று தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது. நியூ பிரிட்ஜ் ரோடு, கண்டோன்மென்ட் ரோடு சந்திப்பில் பிஎம்டபிள்யூ பந்தய கார் விளக்குக் கம்பம் ஒன்றில் மோதிவிட்டது. படம்: ஸ்டோம்ப்