புகைப்பதைக் கைவிடத் தூண்டும் இயக்கமும் திட்டமும்

1 mins read
973aad3a-5f2e-4693-b84a-898089d62fa5
-

புகைப்பதால் உடல்நலத்திற்கு ஏற் படக்கூடிய ஆபத்துகள் பற்றி எடுத்துக்கூறி புகைக்கும் பழக்கத் தைத் தடுக்கும் நோக்கத்தில் சுகாதார மேம்பாட்டு வாரியம் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அந்த இயக்கத்தின் ஒரு பகுதி யாக பொது போதனை செயல் திட்டம் ஒன்று வரும் டிசம்பர் வரை நடப்பில் இருக்கும். சிகரெட் புகைப்பதால் ஏற்படக்கூடிய கெடு தல்களை எடுத்துச் சொல்லி, அந்த கெட்ட பழக்கத்தால் ஒரு வருடைய உடல்நலமும் குடும்ப மும் எப்படியெல்லாம் பாதிக்கப்படு கின்றன என்பதை அந்த இயக்கம் எடுத்துக்கூறும்.

சிகரெட் புகைக்கும் பழக்கம் காரணமாக எந்த அளவுக்கு உடல் நலப் பாதிப்பும் குடும்பத்தில் பிரச் சினைகளும் ஏற்பட்டன என்பதை யும் பணம் எந்த அளவுக்கு விரய மானது என்பதையும் அந்தப் பழக் கத்திற்கு அடிமையான சிலர் நேரடி யாக எடுத்துக்கூறி விளக்குவர். 'நான் இதைச் சொல்லத்தான் வேண்டும்' என்ற தலைப்பிலான அந்தப் போதனை இயக்கத்தில் பல காணொளிகளும் இடம்பெறும். போதனை இயக்கம் இந்த வாரியத் தின் புகைப்பதை நிறுத்த ஊக்கு விக்கும் 'ஐ குவிட்' எனப்படும் 'நான் கைவிடுகிறேன்' இயக்கத் திற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

புகைப்பதற்கு எதிரான தேசிய பொது போதனை இயக்கம் தொடக்க நிகழ்ச்சியில் உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின் கலந்துகொண்டார். படம்: சுகாதார மேம்பாட்டு வாரியம்