மனநலப் பிரச்சினைகளைக் கையாள அதிகம் பேர் உதவி நாடுகிறார்கள் என்று அங் மோ கியோ குடும்ப சேவை நிலையத்தின் சமூக சேவை அமைப்பின் தலைமை நிர்வாகி டாக்டர் வின்சென்ட் இங் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் 'மைண்ட் கேர்' என்ற மனநல சேவையின் உதவியை நாடியவர்களின் எண் ணிக்கை கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 42 விழுக்காடு அதி கரித்திருப்பதாக அவர் தெரிவித் தார். அங் மோ கியோ சென்ட்ரல் ஸ்டேஜில் நேற்று நடந்த 'மனநல கதைகள்' என்ற கண்காட்சியில் அவர் உரையாற்றினார். இந்த ஆண்டின் மனநலப் புரிந்துணர்வு சிங்கப்பூர் கற்றல் தொடர் நடவடிக் கையின் முதல் நிகழ்ச்சியாக அந்தக் கண்காட்சி இடம்பெற்றது. மனநலப் பிரச்சினைகளுக்கு எதிராக 18 பேர் சந்தித்த சொந்த அனுபவங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை அந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டியது.
அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சருமான கோ போ கூன் சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த 2016 முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் இந்த அமைப்பு மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய ஏறக்குறைய 400 பேரைக் கையாண்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இன்றைய சிறார்கள் ஏராளமான மனஉளைச்சலை எதிர்நோக்கு கிறார்கள். படிப்பில் மட்டுமின்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் அந்த உளைச்சல் அவர்களுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக் கிறது என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
மனநலப் பிரச்சினை கள் பற்றி பலவற்றை யும் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் 'மனநல கதைகள்' என்ற கண்காட்சிக்கு நேற்று பலரும் சென்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

