14,000 பேர்: ஓட்ட நிகழ்வில் பெண்கள், குழந்தைகள்

14,000 பேர்: ஓட்ட நிகழ்வில் பெண்கள், குழந்தைகள்

1 mins read
5f9692da-47ad-412e-ac26-a8af0eb25bb4
-

சிங்கப்பூர்: கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்ட நிகழ்வில் 14,000க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். சிங்கப்பூர் விளையாட்டு மையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நேற்றுக் காலை மழைத் தூறலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வந்து ஓட்டத்தில் பங்கேற்றனர். காலை 5.15 மணிக்குத் தொடங்க வேண்டிய 21.1 கிலோ மீட்டர் ஓட்டம் மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. அதேபோல 10 கிலோ மீட்டர் ஓட்டம் 15 நிமிடங்கள் தாமதமாக 6.45 மணிக்கு தொடங்கியது. குழந்தைகள் தங்களது அன்னையருடன் பங்கேற்ற ஓட்ட நிகழ்வும் நேற்று நடைபெற்றது. ஆக அதிக 21.1 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் 1.7 விநாடிகளில் ஓடி முடித்த ஜப்பானிய பெண்மணி கசுமி யோ‌ஷிடா முதலிடத்தை வென்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்