சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (எஸ்பிஎச்) ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தனது நிகர லாபம் 19.7% குறைந்திருப்பதாக நேற்று அறிவித்தது. முந்தைய நிதி ஆண்டில் செய் யப்பட்ட ஒரு கூட்டுத்தொழில் முதலீட்டிலிருந்து வரவிருந்த லாப தொகை வராதுபோனது இதற் குரிய காரணங்களில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கான நிகர லாபம் $69 மில்லியன் குறைந்து $281.1 மில்லியனாக இருந்தது. ஒரு பங்கு வருவாய் 17 காசாக இருந்தது. இது முந்தைய காலாண்டில் 22 காசாக இருந்தது. ஊடக மற்றும் சொத்துத் துறை நிறுவனமான எஸ்பிஎச், ஒரு பங்கிற்கு 7 காசு இறுதி லாபஈவு உத்தேசித்து இருக்கிறது.
இதில் ஒரு பங்கிற்கு 3 காசு வழக்கமான லாபஈவும், ஒரு பங்கிற்கு 4 காசு என்ற சிறப்பு லாப ஈவும் அடங்கும். இடைக்கால 6 காசு லாபஈவுடன் சேர்த்து பார்க்கையில் 2018 நிதி ஆண்டிற் கான மொத்த லாபஈவு 13 காசாக இருக்கும் என்றது நிறுவனம். எஸ்பிஎச் நிறுவனம் ஊடகத் தொழிலில் தொடர்ந்து மின் னிலக்க திட்டங்களில் முதலீடு செய்யும் என்றும் கூறப்பட்டது. குழுமத்தின் நடைமுறை லாபம், நடைமுறை வருவாய் குறைந்த போதிலும் $206.3 மில்லியன் என்ற நிலையில் உறுதியாக இருந்தது. முழு ஆண்டு நடை முறை வருவாய் $50 மில்லியன் அல்லது 4.8% குறைந்து $982.6 மில்லியனாக இருந்தது.

