மருத்துவர்கள், சொத்து முகவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற அதிக வருவாய் ஈட்டுவோரில் சிலர் முறையாக வருமான வரி செலுத்தாததையடுத்து அத்தகையவர் களிடமிருந்து சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் $10 மில்லியன் வரியை மீட்டு இருக்கிறது. இந்தத் தொகையில், அவர்கள் நான்கு ஆண்டுகளில் செலுத்தி இருக்கவேண்டிய வரி உள்ளடங்கும். 20க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பல் மருத்துவர்களும் மொத்தம் $3.6 மில்லியன் செலுத்தி இருக்கிறார்கள். இந்த ஆணையம் கடந்த 2015 முதல் தனியார் துறையைச் சேர்ந்த சுமார் 145 மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், 32 மருத்துவக் குழுமங்கள் தாக்கல் செய்த வருமான வரிப் படிவங்கள் தொடர்பில் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
145 மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மீது வருமானவரி விசாரணை
1 mins read

