விக்னேஸ்வரன்: தமிழர்களை விடுவித்தால் மட்டுமே

விக்னேஸ்வரன்: தமிழர்களை விடுவித்தால் மட்டுமே

2 mins read

இலங்கை அரசுக்கு ஆதரவு அரசியல் கைதிகளாக இலங்கைச் சிறைகளில் அடைபட்டுள்ள தமி ழர்களை விடுவித்தால் மட்டுமே 'வரவுசெலவுத் திட்டம் 2019'க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாநில முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் திரு விக்னேஸ்வரன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "விடுதலைப்புலி கள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறி தமிழ் இளையர்கள் சிலர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். ஆனால், முன்னாள் துணைத் தலைவர் கருணா உட்பட விடு தலைப்புலிகள் அமைப்பின் தலை வர்கள் பலர் நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்," என்றார் திரு விக்னேஸ்வரன். நவம்பர் 5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப் படவுள்ளது. அந்த அறிக்கை மீது டிசம்பரில் விவாதம் நடைபெறும்.

இந்த நிலையில், முன்னாள் இலங்கை அதிபரான மகிந்த ராஜபக்சே மேலும் சில எம்.பி.க் களைத் திரட்டிக்கொண்டு, வரவு செலவுத் திட்ட அறிக்கைக்கு எதிராக வாக்களித்து அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை யிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே சிறிசேன அரசு தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத் துடன் தொடர்புகொண்டதாகச் சொல்லி கைது செய்யப்பட்ட வர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுள்ளதாகத் தமிழ் அரசியல் ஆர்வலர்களும் மனித உரிமைகள் குழுக்களும் கூறி வருகின்றன. ஆனால், இலங்கை அரசோ அப்படி எவரும் சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே, "சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்டகால கோரிக் கையாக இருந்து வருகிறது," என்று தமிழ் தேசிய கூட்டமைப் பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.