சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங் ஆகிய பகுதிகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இரண்டு மூத்தோர் பராமரிப்பு நிலையங்களுடனான தாதிமை இல்லங்கள் திறக்கப்படவுள்ளன. ஐநூறு படுக்கை வசதிகளைக் கொண்ட அந்த நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பராமரிப்பிட வசதிகளும் இருக்கும். மறதிநோய் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கொருவர் நேரடியாக உரையாடிக்கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அது அமையும் என சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவி க்கப்பட்டது. வெஸ்ட் ராக் வீடமைப்புப் பேட்டையில் அமையவிருக்கும் தாதிமை இல்லத்தில் 220 படுக்கைகளும் புக்கிட் பாஞ்சாங், செஞ்சா ரோட்டில் அமையவிருக்கும் தாதிமை இல்லத்தில் 350 படுக்கைகளும் இருக்கும். பலதுறை மருந்தகத்திற்கு அருகே ஒரு 12 மாடிக் கட்டடத்தில் ஒருங் கிணைக்கப்பட்ட சுகாதார வசதிக ளைக் கொண்டு கட்டப்படுவது இதுவே முதல் முறை.
புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங் ஆகிய இடங்களில் வீடமைப்புப் பேட்டைகளில் உருவாகவிருக்கும் தாதிமை இல்லங்களின் மாதிரித் தோற்றம். படம்: சுகாதார அமைச்சு

