சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எஞ்சி னி யரிங் (எஸ்டி எஞ்சினியரிங்) நிறுவனம் புதிய தானியங்கி எந் திரங்களை உருவாக்கியுள்ளது. தொழிற்சாலைகள், தளவாடக் கிடங்குகளில் கனமான பொருட் களைப் பாதுகாப்பாகத் தூக்கி சீராக அடுக்கி வைக்கவும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத் திற்கு சரக்குகளைக் கையாளும் பணிகளை யார் உதவியும் இன்றி இடும் கட்டளைகளை ஏற்று நிறைவேற்றும் இந்த எந்திரங்கள். தொழிற்சாலைகளில் சரக்கு கள், தளவாடங்களைக் கையாள்வ தற்குப் பயன்படுத்தப்படும் ஃபோர்க் லிஃப்ட், ட்ரக்ஸ் போன்ற வாகனங்களுக்குப் பதிலாக இந்த எந்திரங்களைப் பயன்படுத்தலாம்.
சரக்குகளைத் தொடர்ச்சியாக அடுக்கி வைக்கும் பணிகளுக்கு இவை பொருந்தும். ஸ்ட்ரோபோ (STROBO) எனப் பெயரிடப்பட்ட ஐந்து எந்திரங்கள் நேற்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த 'இண்டஸ்ட்ரியல் ட்ரான்ஸ் ஃபார்மேஷன் ஆசிய பசிபிக் வர்த்தகக் காட்சி"யில் அறிமுகப்ப டுத்தப்பட்டன. சரக்குகளைச் சரியாக அடை யாளம் கண்டு கையாளும் மேம்ப ட்ட திறன்களைக் கொண்ட ஸ்ட்ரோபோ எந்திரத்தை தயாரிப்புக் கூடங்கள், தளவாடக் கிடங்குகள் போன்றவற்றில் சரக்குகளைக் கையாளும் பணிகளுக்குப் பயன் படுத் த லாம். இந்த எந்திரங்கள் உள்புறம், வெளிப்புறம் போன்ற சுற்றுப்புறங்களைத் தனது உணர் கருவி மூலம் அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படக்கூடிய வல் லமை படைத்தது.
இந்த எந்திரங்கள் தானாக இயங்கும் ஆற்றல் கொண்டிருந்தாலும் தேவைப் பட்டால் ஓட்டுநர்களைக் கொண்டும் இந்த எந்திரங்களைக் கட்டுப்படுத்தலாம். இந்த எந்திரத் தின் விலைகள் பற்றி எஸ்டி எஞ்சி னியரிங் எதுவும் வெளியிடவி ல்லை. அறிவார்ந்த தேசத்தை உரு வாக்க முன்னெடுக்கப்படும் முயற்சி களுக்கு ஆதரவளிக்கும் வகையில் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம் அறிவார்ந்த போக்கு வரத்து, அறிவார்ந்த தளவாடத் துறை போன்றவற்றில் அடியெடுத்து வைக்கும் முயற்சிகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளதாக அந் நிறுவனத்தின் தளவாடத் துறை தானியக்கத்துறையின் மூத்த துணைத்தலைவரும் பொது மேலா ளருமான திரு வில்லியம் லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எஞ்சி னி யரிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்ட்ரோபோ தானியங்கி எந்திரங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

