தர்மன்: தரமான வேலைகளை உருவாக்குவது அவசியம்

தர்மன்: தரமான வேலைகளை உருவாக்குவது அவசியம்

1 mins read
90496023-9aa8-4d3e-bf3b-0a54e544b24e
-

நான்காம் தொழிற்புரட்சி அல்லது தொழிற்துறை 4.0 என்பதன் முழுப் பயனையும் கட்டிக்காக்க நாடுகள் மற்றும் தொற்துறைக ளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறி இருக்கிறார். அதேநேரம் எதிர்காலத்திற்கான தரமான வேலைகளை உருவாக்க இருக்கும் தொழிற்துறை 4.0ன் அடிப்படை சவாலை முதலாளிகளும் பயிற்சியாளர்களும் கவனிக்க வேண்டும் என்றார் அவர். "ஒரு வழியிலோ பல வழிகளிலோ தொழிற்துறைக்கான வேகத்தையும் ஆற்றலையும் நாம் மேம்படுத்தினாலும் எதிர்காலத்தில் போதுமான வேலைகள் இல்லாமற் போகலாம்.

"வேலைகள் இருக்கும். உயர் தரமானவையாக அவை இருக்கும். ஆனாலும் போதுமான அளவுக்கு இருக்காது. "எனவே வேலைகள் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க உற் பத்தித் துறையைக் கடந்து வேலை களை உருவாக்க வேண்டும். "குறிப்பாக, நமது பொருளிய லில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு துறையிலும் தரமான வேலைகளாக அவை இருப்பது அவசியம்," என் றார் திரு தர்மன்.

ஆசிய-பசிபிக் தொழிற்துறை உருமாற்ற வர்த்தகக் கண்காட்சியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்