சிங்கப்பூர் சமூக அறிவியல் பல் கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் நடத்தை அறிவியல் பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு மேற்கொண்ட 24 மாணவர்கள் இம்மாதம் 12ஆம் தேதி பட்டம் பெற்றனர். இப்பல்கலைக் கழகத்தில் தமி ழில் இளங்கலைப் பட்டம் வழங் கப்படுவது இது பத்தாவது முறை யாகும். மேலும், இதுவரை சுமார் 300 மாணவர்கள் இப்பல்கலைக் கழகத்தில் தமிழில் பட்டம் பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த விழாவில் திருமதி சத்தியா அன்புச்செழியன், வளர்தமிழ் இயக்கம் வழங்கிய தங்க விருதுக்கான 3,000 வெள் ளியையும் ஸ்ரீ விநாயகா எக்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தின் மொழி மற்றும் இலக்கியத்திற்கானச் சாதனை விருதுகளையும் பெற்றார். மாடர்ன் மோண்டிசோரி நிறு வனம் வழங்கிய 2,000 வெள்ளிப் பரிசுத் தொகையைத் திருமதி ருத்ரபதி விஜயலட்சுமி பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் கற் பிக்கப்படும் இளங்கலைப் பட்டக் கல்வியானது, தமிழாசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் தம் அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டக்கல்வியானது -தமிழ்மொழி மற்றும் இலக்கியம், தொடர்பியல் அல்லது ஆங்கில மொழி ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இப்பட்டக் கல்வியைத் தொடர விரும்புவோர், இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள் ளலாம். மாணவர்கள் குறைந்தது மூன்று ஆண்டு முதல் எட்டு ஆண்டுக்குள் இப்படிப்பை நிறைவு செய்யவேண்டும்.
வளர்தமிழ் இயக்கம் வழங்கிய தங்க விருதைப் பெற்ற திருமதி சத்தியா அன்புச்செழியன் (இடது), மாடர்ன் மோண்டிசோரி நிறுவனத் தின் வெள்ளி விருதைப் பெற்ற திருமதி ருத்ரபதி விஜயலட்சுமி. படம்: சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

