ஹாலந்து வில்லேஜின் இரு கார்ப்பேட்டைகள் அடுத்தாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக ஹாலந்து டிரைவில் உள்ள நகர மறுசீரமைப்பு ஆணை யத்தின் கார்ப்பேட்டையைப் பயன்படுத்தும் நோக்கில் அதனை அடைவதற்கான தற்காலிக சாலை ஒன்று அமைக்கப்படும். இது தொடர்பாக அந்த வட்டார வர்த்தகக் கூடங் களுக்கு சுற்றறிக்கை ஒன்று இந்த வாரத்தில் அனுப்பப் பட்டது. அந்த வட்டாரத்தில் பல பயன் மேம்பாட்டுக் கட்டடங் கள் கட்டப்பட உள்ளன. எனவே திறந்தவெளி கார்ப் பேட்டைகளில் மொத்தமுள்ள 317 கார் நிறுத்தத் தொகுதி களில் பெரும்பாலானவை நவம்பர் 1ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அந்த மேம் பாட்டுப் பணிகளின் குத்தகை நிறுவனம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹாலந்து வில்லேஜ் கார்ப்பேட்டைகள் மூடல்
1 mins read
-

