உலகப் போட்டித்தன்மை தரப் பட்டியலில் சிங்கப்பூரை அமெரிக்கா பின்னுக்குத் தள்ளி உள்ளது. உலகப் பொருளியல் கருத்து மன் றம் இதனைத் தெரிவித்துள்ளது. 140 பொருளியல் நாடுகளின் பட் டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சிங்கப்பூரும் மூன்றா மிடத்தில் ஜெர்மனியும் உள்ளன. நான்காம் நிலையில் சுவிட்சர் லாந்தும் ஐந்தாமிடத்தில் ஜப்பானும் வந்துள்ளன. குறைந்த வரிவிதிப்பு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை எளிதாக வேலைக்கு எடுத்தல், புத்தாக்கம், சந்தை ஆற்றல் ஆகிய வற்றின் அடிப்படையில் உயர்தரம் கணக்கிடப்படுகிறது. இவ்வாண்டுக்கான தரப்பட் டியல் கருத்துருவாக்கம், விரை வான செயல்பாடுகள் ஆகியவற் றின் மீது கவனம் செலுத்தியது. 2007=2009 நிதி நெருக் கடிக்குப் பிறகு அமெரிக்கப் பொருளியல் முதல் தரத்தை எட்டியிருப்பது இதுவே முதல் முறை. புதிய கணிப்பு முறை இதற்கு உதவியதாக மன்றம் கூறியது. அமெரிக்காவின் வர்த்தகக் குறைகூறலுக்கு ஆளாகி வரும் சீனா இந்தப் பட்டியலில் 28வது இடத்துக்குச் சென்றது. 2018-10-18 06:00:00 +0800
போட்டித்தன்மை தரப்பட்டியலில் சிங்கப்பூருக்கு இரண்டாமிடம்
1 mins read
-

